
ராஞ்சானாவுக்கு அடுத்து தனுஷின் கரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை வேலையில்லா பட்டதாரி தட்டிச் சென்றுள்ளது. இன்றைய தேதிவரை உலகம் முழுவதும் ஐம்பது கோடிகளை படம் வசூல் செய்துள்ளது.
வேலையில்லா பட்டதாரி தனுஷின் 25 வது படம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தை இயக்கியிருந்தாலும் தனுஷ்தான் படத்தின் ஸ்கிரிப்டையும், காட்சிகளையும் வடிவமைத்தார். அவரது வுண்டர்பார் நிறுவனம்தான் தயாரிப்பு.சிவ கார்த்திகேயனுக்கு உள்ள மார்க்கெட் தனுஷுக்கு இல்லை என பரவலாக பலரும் எழுதி வந்த நிலையில் தனது ஸ்டார் பவரை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் வேலையில்லா பட்டாரி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதில் தனுஷுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
தனது 25 வது படம் ஐம்பது கோடிகளை வசூலித்த பிறகும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது என மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் தனுஷ்.
No comments:
Post a Comment