Saturday, August 16, 2014
Allianz senior branch manager Mahendrarajah
நல்லூரான் வீதியில் மணல் சிற்பங்கள்

நல்லூர்க் கந்தனின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
நல்லூர் பெருந்திருவிழாவைக் காண்பதற்காக நாலா திக்குமிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தினமும் முருகப்பெருமான் மாலை வீதியுலாவரும் காட்சியை காண வரும் அடியவர்களில் சிறுவர்கள் இளைஞர்கள் என்ற பேதம் இன்றி ஆலய சூழலில் காணப்படும் மணல் பரப்பில் பக்திமயமான உருவங்களை உருவாக்கி தமது திறமைகளை வெளிப்படுத்தும் காட்சிகள் பிரம்மிக்கவைக்கின்றன.
தினமும் பற்பல கைவண்ண கோலங்கள் மணலில் உருவாகின்றன. இவற்றில் சில வருமாறு.

.jpg)
50 கோடிகளை தாண்டிய வேலையில்லா பட்டதாரி

ராஞ்சானாவுக்கு அடுத்து தனுஷின் கரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை வேலையில்லா பட்டதாரி தட்டிச் சென்றுள்ளது. இன்றைய தேதிவரை உலகம் முழுவதும் ஐம்பது கோடிகளை படம் வசூல் செய்துள்ளது.
வேலையில்லா பட்டதாரி தனுஷின் 25 வது படம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தை இயக்கியிருந்தாலும் தனுஷ்தான் படத்தின் ஸ்கிரிப்டையும், காட்சிகளையும் வடிவமைத்தார். அவரது வுண்டர்பார் நிறுவனம்தான் தயாரிப்பு.சிவ கார்த்திகேயனுக்கு உள்ள மார்க்கெட் தனுஷுக்கு இல்லை என பரவலாக பலரும் எழுதி வந்த நிலையில் தனது ஸ்டார் பவரை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் வேலையில்லா பட்டாரி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதில் தனுஷுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
தனது 25 வது படம் ஐம்பது கோடிகளை வசூலித்த பிறகும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது என மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் தனுஷ்.
கவனிப்பார் இல்லாத நிலையில் நல்லுார் மந்திரிமனை
நமது கலாச்சாரப் பாரம்பரியம் மிக்க வரலாற்றைக் கொண்ட யாழ் நல்லுார் மந்திரிமனை கவனிப்பார் இல்லாத நிலையில் காணப்படுகின்றது.
நல்லூர் சங்கிலிய மன்னனின் மந்திரி மனை எனக் கூறப்படும் கட்டிடம் இன்றும் பாடசாலை மாணவர்களினால் பார்வையிடப்பட்டு வருகின்றது.
இந்தக் கட்டிடம் இன்று உரிய முறையில் பராமரிக்கப்படாமல் அழிந்து போகும் நிலையில் காணப்படுகின்றது. இதனை தனியார் தமது உடமையாக்கும் முயற்சியிலும் கூட சிலர் ஈடுபட்டு வருகின்ற நடவடிக்கையும் காணப்படுகின்றது.
ஏற்கனவே யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வரின் தலைமையில் ஒரு கூட்டம் நடை பெற்று இதனை பராமரிப்பது உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கான ஒரு குழுவும் நியமிக்கப்பட்டு அந்தக் குழுவும் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு பதவிகளைபெற்று தனது கடமையை செய்யாது கைவிட்டு மாநகரசபையின காலமும் முடிவடையவுள்ளது.
ஆனாலும் கூட வட மாகதாண சபை இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுத்து இதனை சீர் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் கூட காணப்படுகின்றது.
தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அரசு திட்டமிட்டு அழித்து வருவதாக சுறுவதிலும் பார்க்க இருக்கும் தமிழர்களின் அடையாளங்களையாவது பாதுகாக்க வட மாகாண சபை முன் வரவேண்டும் என பலரும் தெரிவிக்கின்றார்கள்.



இரு மோட்டார் சைக்கிள்களுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: இருவர் படுகாயம்

இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.பருத்தித்துறை வீதியில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவரும்- இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த உடுவில் அம்பலவாணர் வீதிப் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜெயந்தன் (வயது 40) ஆகியோருமே காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு- மேலதிக விசாரணைகளை யாழ்.போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)