
லண்டனில் இருந்து தனது குடும்பத்துடன் வற்றாப்பளை அம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்ய வந்த குடும்பஸ்தர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மயில்வாகனம் கணேசரூபன் (வயது 39) என்பவரையே நேற்று மாலை வற்றாப்பளையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வவுனியா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடாடபாக மேலும் தெரிவயவருவதாவது,
லண்டனில் இருந்து வற்றாப்பளை கோயில் பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்ள நான்கு பிள்ளைகள், மனைவியுடன் வந்த கணேசரூபன் வற்றாப்பளையில் உள்ள தனது பெற்Nறாருடைய வீட்டில் தங்கியிருந்துள்ளார். நேற்றைய தினம் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற இருவர், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இருக்கிறார்களா என விசாரித்துவிட்டு சென்றுள்ளனர்.பின்னர் மாலையில் வீட்டிற்கு சென்ற 6 பேர் தாங்கள் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்துவிட்டு கணேசரூபனைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளைஇ இன்று அவரது மனைவி கணேசரூபன் சுகந்தி அவரைப் பார்பதற்காக வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு சென்ற போது; கணேசரூபன் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்த அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவருடைய கடவுச் சீட்டை தங்களிடம் தருமாறு கோரியுள்ளதாகவும் கணேசரூபன் சுகந்தி தெரிவித்துள்ளார்.